சென்ற வாரம் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிற்கு சென்றிருந்தேன். எதாவது புத்தகம் வாங்கலாம் என்று புத்தக கடையை பார்த்தபோது அந்த புத்தகம் கண்ணில்பட்டது.
புத்தகத்தின் தலைப்பு " ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க!". விஜய் டிவி நீயா நானா கோபிநாத் அவர்களின் படம் போட்டு இருந்தது.தலைப்பையும் அவர் படத்தையும் பார்த்ததும் அதை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று தோன்றியது. வாசகர்களின் சைகாலஜியை நன்றாக தெரிந்து இந்த தலைப்பை இட்டுக்கிறார் கோபி. விலை 60 ரூபாய் என்றார்கள். வாங்கி கொண்டேன்.
புத்தகத்தை புரட்டினால், அடா அடா அடா ! அவ்வளவு அருமையாக உள்ளது. வாழ்கையை எவ்வாறு அழகாகவும் இனிமையாகவும் வாழ வேண்டும் என்ற கேள்விக்கான விடை இந்த புத்தகம். எளிய தமிழ்.பொருத்தமான படங்கள். அறிவுரை என்ற மருந்தை மிக மிக இனிப்பாக பரிமாறியிருக்கிறார் கோபி.
இவரின் பெருமை பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்காது என நினைக்கிறேன். இவரை பற்றி படித்தவுடன் நம் கோபி இவ்வளவு விருதுகளுக்கு சொந்தமானவரா என வியந்தேன். அவ்வளவு விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார்.புத்தகத்தை மிக வேகமாக படித்து முடித்து விட்டேன். அதன் கருத்துகள் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. நீங்களும் இந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள். நான் இவருடைய பிற புத்தகங்களை படிக்கும் ஆர்வத்துடன் இருக்கிறேன்.
thank u for ur information.
ReplyDeleteவருகைக்கு ரொம்ப நன்றி தோழியே!அடிக்கடி வாங்க
ReplyDelete