Sunday, December 12, 2010

கண்டுபிடியுங்க பார்ப்போம் !

நான் நண்பரிடம் ஒரு விளையாட்டு விளையாடினேன். அவரிடம் ஒரு எண்ணை நோட்டு புத்தகத்தில் எழுதுமாறு கூறினேன் . நான்கு இலக்கங்கள் வரை எழுதலாம் என்றேன்.

அவரும் எழுதினார் (4569). பிறகு அதை வாங்கி ஒரு எண்ணை அந்த பக்கத்தின் இறுதியில் அதன் நேர் கீழாக எழுதினேன்(24567).

பிறகு அவரை வேறு ஒரு எண்ணை அவர் முதலில் எழுதிய எண்ணின் நேர் கீழாக எழுத சொன்னேன் . அவர் எழுதிய உடனேயே (1232) நானும் ஒரு எண்ணை (8767) அதன் கீழ் எழுதினேன்.

மீண்டும் ஒரு எண்ணை நான் எழுதிய எண்ணின் கீழ் எழுத சொன்னேன் . எழுதினார் (758). பிறகு நான் உடனேயே மற்றொரு எண்ணை அதன் கீழ் எழுதினேன் (9241) .

உடனே எழுதினேன் என்பதை கவனிக்க வேண்டும். பிறகு அந்த ஐந்து எண்களையும் கூட்டசொன்னேன். கூட்டிய பின் ஆச்சர்யபட்டு போனார்.
ஆம். நான் முதலில் பக்கத்தின் எழுதிய எண் தான் அது. இங்கேகவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் நான் மூன்று எண்களை எழுதிய போதும் ( ஒரு விடை மற்றும் இரண்டு எண்கள் ) நேரம் எடுக்காமல் உடனே எழுதினேன் என்பது தான்.

என்னால் எவ்வாறு அப்படி எழுத முடிந்தது என்பதை கண்டுபிடியுங்க பார்ப்போம். கண்டுபிடிக்கும் அனைவருக்கும் நிச்சய பரிசு உண்டு.

Wednesday, December 8, 2010

அன்பை எதிர்பார்க்காதீர்

இன்று நான் வாழ்வை அழகாக்குவதற்க்கான வழி ஒன்றினை என் தோழர் ஒருவரிடம் இருந்து கற்று கொண்டேன் . அதுதான் "அடுத்தவரிடம் எதையும் எதிர் பார்க்காதே! வாழ்க்கை நன்றாக இருக்கும் ". எவ்வளவு சத்தியமான வாக்கு இது. நாம் பொதுவாக நம் நண்பரிடம் எதையாவது எதிர் பார்ப்போம். உதாரணமாக அவர் கிளம்பும்போது நமக்காக காத்திருக்க வேண்டும், எதையாவது புதிதாக செய்யும் போது நம்மிடம் சொல்ல வேண்டும் போன்றவை. ஆனால் எந்த காரணத்தினாலோ அவர் அதை செய்ய வில்லை என்றால் நமக்கு கிடைப்பது ஏமாற்றமே. அதனால் அவர் மீது கொண்ட அன்பு நாளாக நாளாக குறைந்து விட கூடிய வாய்ப்பு மிக அதிகம் . அதனால் வருத்தம் நமக்கு மட்டுமல்ல, அவருக்கும் தான். இப்படி அழகாய் போய் கொண்டிருக்கும் வாழ்க்கையை நமக்கு நாமே சோக மயமாக்க காரணம் நாம்தான்.நம்முடைய எதிர்பார்ப்புதான்.

நான் இவ்வளவு அன்பு தருகிறேன் அதனால் இவ்வளவு அன்பு எதிர்பார்க்கிறேன் என்பது எவ்வளவு வேடிக்கையான விஷயம். இது என்ன வியாபாரமா? நாம் எப்போதுமே கொடுப்பவர்களாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கலாம். எதையும் எதிர்பார்க்காதபோது பதிலுக்கு அன்பு கிடைத்தால் அதை போனசாக எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் அது கிடைக்க வில்லை என்றால் அதை நினைத்து வருந்த கூடாது. இன்னும் அதிகமாக அன்பு செலுத்த துவங்க வேண்டும். இந்த வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்த வாய்ப்பு. அதை நாம் முழுவதும் மகிழ்ச்சியாக நுகர வேண்டும். ஒரு விஷயம் நமக்கு வருத்தம் தருகிறது , அதற்க்கு நாம்தான் காரணம் என்றால் அதை மாற்றி கொள்ள தயங்க கூடாது.

அதனால் அடுத்தவரிடம், குறிப்பாக நாம் அன்பு செலுத்துபவரிடம் , நம் மீது அன்பு செலுத்துபவரிடம் எதையும் , குறிப்பாக அன்பை எதிர் பார்க்க கூடாது. மாறாகஅதை வாரி வழங்க வேண்டும். அதனால் மற்றவருக்கு சந்தோசமோ இல்லையோ நமக்கு சந்தோசமாக இருக்கும். வாழ்க்கை அழகாகும். நம் வாழ்கையும் நம் சுற்றி இருப்பவர் வாழ்கையும் தான். இதை எனக்கு ஒரு வார்த்தையில் உணர்த்திய என் நண்பருக்கு நன்றி.