பாலாவின் பரதேசிக்குப் போவதா அல்லது வத்திக்குச்சிக்குப் போவதா என குழப்பத்தில் ஆழ்ந்திருந்தோம்.இறுதியில் வத்திக்குச்சியை தேர்வு செய்தோம்.காரணம் இதுதான்.பரதேசி உலகத்தரமான படம். மனித உறவுகளைப் பற்றி கூறுகிறது.ஆயிரம் விருதுகள் வாங்கும் என்றெல்லாம் விமர்சனம் வந்தது.வழக்கம்போல சோகமான முடிவு என்றறிந்தேன்.வத்திக்குச்சியைப் பற்றி நல்ல விமர்சனமும் வந்திருந்தது, கெட்ட விமர்சனமும் வந்தது.ஆனால் பரதேசியை விட பொழுதுபோக்கான படம் என்பதில் சந்தேகமே இல்லாமல் இருந்தது. படம் முடிந்து சோகமாக வரக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக வத்திக்குச்சிக்கு சென்றோம்.
க்ரோம்பேட் வெற்றி தியேட்டருக்குதான் சென்றோம்.சென்னையில் பார்த்த படங்களில் பாதிக்கு மேல் அந்த திரையரங்கினில்தான் பார்த்திருக்கிறேன். வெற்றி தியேட்டர் எங்களுக்கு ஹோம் தியேட்டர் போலாகி விட்டது. சரி சரி ரொம்ப மொக்கை போடாத. விமர்சனத்துக்கு வா என்று நீங்கள் நினைப்பது என் காதில் விழுகிறது. இனி நேராக விமர்சனத்துக்கு செல்வோம்.
படத்தின் கதையை பற்றியும் காட்சிகளை பற்றியும் விமர்சனம் என்ற பெயரில்
நான் இங்கு எழுத போவது இல்லை.
அதனால் நீங்கள் தைரியமாக படிக்கலாம். ஒரே வாக்கியத்தில் சொல்வதானால் படத்தை ஒரு தடவ பாக்கலாம்.நன்றாக பொழுது
போகும். விளக்கமாக சொல்வதானால் வழக்கம் போல படத்தை வித்தியாசமாக எடுத்திருக்கிறார்கள். பாடல்கள் நன்றாக உள்ளன. புதுமுக கதாநாயகனின் நடிப்பு பிரமாதம். அஞ்சலி அமுல் பேபி போல வந்திருக்கிறார். கதாநாயகன் புது முகமாக இல்லாமல்
கார்த்தியை போன்ற ஒருவராக இருந்தால் படம் சூப்பர் ஹிட் என்பதில் சந்தேகமே இல்லை எனக்கு. இப்பவும் கூட படம் ஹிட் ஆகலாம். மக்களின் ரசனையை பற்றி தெரியவில்லை. படத்தில் சில இடங்களில் லாஜிக் பார்க்கவில்லை. சில இடங்களில் தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லாத லாஜிக்கையெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். அதில் நான் அசந்து விட்டேன். அது என்ன லாஜிக் என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.படம் முடிந்து சோகமாக வர மாட்டீர்கள் என்பது உத்திரவாதம். இது என் கருத்து. தங்கள் கருத்தையும் தெரிவியுங்கள்


