நான் நண்பரிடம் ஒரு விளையாட்டு விளையாடினேன். அவரிடம் ஒரு எண்ணை நோட்டு புத்தகத்தில் எழுதுமாறு கூறினேன் . நான்கு இலக்கங்கள் வரை எழுதலாம் என்றேன்.
அவரும் எழுதினார் (4569). பிறகு அதை வாங்கி ஒரு எண்ணை அந்த பக்கத்தின் இறுதியில் அதன் நேர் கீழாக எழுதினேன்(24567).
பிறகு அவரை வேறு ஒரு எண்ணை அவர் முதலில் எழுதிய எண்ணின் நேர் கீழாக எழுத சொன்னேன் . அவர் எழுதிய உடனேயே (1232) நானும் ஒரு எண்ணை (8767) அதன் கீழ் எழுதினேன்.
மீண்டும் ஒரு எண்ணை நான் எழுதிய எண்ணின் கீழ் எழுத சொன்னேன் . எழுதினார் (758). பிறகு நான் உடனேயே மற்றொரு எண்ணை அதன் கீழ் எழுதினேன் (9241) .
உடனே எழுதினேன் என்பதை கவனிக்க வேண்டும். பிறகு அந்த ஐந்து எண்களையும் கூட்டசொன்னேன். கூட்டிய பின் ஆச்சர்யபட்டு போனார்.
ஆம். நான் முதலில் பக்கத்தின் எழுதிய எண் தான் அது. இங்கேகவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் நான் மூன்று எண்களை எழுதிய போதும் ( ஒரு விடை மற்றும் இரண்டு எண்கள் ) நேரம் எடுக்காமல் உடனே எழுதினேன் என்பது தான்.
என்னால் எவ்வாறு அப்படி எழுத முடிந்தது என்பதை கண்டுபிடியுங்க பார்ப்போம். கண்டுபிடிக்கும் அனைவருக்கும் நிச்சய பரிசு உண்டு.
எளிதாக கூட்ட கூடிய எண்கள்தானே நண்பரே. எனவே உடனே கூட்டி உங்கள் எண் வரும்படி செய்து விடலாம்.
ReplyDeleteஅய்யா நான் கணக்குல முட்டை .நீங்களே பதிலை சொல்லிடுங்க . அப்ப்ரமாக வந்து பார்க்குறேன் . பகிர்வுக்கு நன்றி
ReplyDeletevery simple... first number u wrote is 20000 + his number - 2 -> 19998 + his number -> prepend the number with 2 and subtract 2 from last digit...
ReplyDeletewhen he wrote next two numbers, u wrote 2 more numbers so that ur first number + his second number = 9999 -> subtract every digit from 9
similar is the case with his second number and ur 3rd number...
where is my prize? edhaavadhu mokka potta, seththa nee......