உன் பிறந்த நாளுக்கு நான் எழுதும் முதல் கவிதை
அதற்கு காரணம் நீ போட்ட விதை
இது நாளை ஆகும் ஒரு பெரும் கதை
கவிதை எழுத நினைத்தேன்
பேனாவை எடுத்தேன்
பேப்பரை கிழித்தேன்
யோசித்தேன்
யோசித்தேன்
கவிதை வரவில்லை
மீண்டும் மீண்டும் யோசித்தேன்
கவிதை கடவுளை யாசித்தேன்
எழுதும் எண்ணத்தை சுவாசித்தேன்
பல புத்தகங்களை வாசித்தேன்
இப்பவும் கவிதை வரவில்லை
ஜூன் மாதம் பிறந்தாய்
செல்வ மகளாய் வளர்ந்தாய்
அன்பை வாரி இறைத்தாய்
அதில் நீ ஒரு தாய்
உன்னிடம் இருப்பது பிள்ளை குணம்
அதற்க்கு காரணம் வெள்ளை மனம்
நான் விட்டதெல்லாம் ரீலா
கேட்டாயா நீயும் கூலா
எழுதி இருக்கிறேன் பாரு தூளா
எழுதியவன் பேரு பாலா
நல்ல கவிதை உன் நடை உன் தனி தன்மை , மேலும் பல கவிதைகள் எழுத என் வாழ்த்துக்கள் .
ReplyDeletegud one...
ReplyDelete